புனித செபஸ்தியாருக்கு 7 மன்றாட்டு

1.பிதாவின் சித்தத்தினாலே உயர்ந்த குடும்பத்தினரான தாய் தகப்பனிடத்திலே பிறந்து எண்ணிலடங்காத பண்ணிய நன்மைகளைச் செய்து வேதத்துக்காகத் துன்பப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக படையில் சேவை செய்தவரான புனித செபஸ்தியாரே, சத்திய திருச்சபையார் எல்லாரையுஞ் சகல பொல்லாப்பக்களிலே நின்று, சர்வேசுரன் இரட்சித்தருள வேணுமென்று பரமகர்த்தர் சந்நிதியில் நீர் மன்றாட வேண்டுமென்று உம்மைப் பார்த்து பிரார்த்தித்துக் கொள்கிறோம் -பர, அருள், பிதா. 2.ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் அநேக அஞ்ஞான இராஜாக்களுக்கும் பிரபக்களுக்கும் சத்திய வேதத்தை பிரசங்கித்து பத்திமதி சொன்னவரான புனித செபஸ்தியாரே, உலகெங்கிலும் பசாசின் ஆராதனை ஒழித்து எல்லோருஞ் சத்திய வேதம் அறிந்து, ஞான தீட்சை பெற்று, திருச்சபைக்கு உள்ளாகத் தக்கதாக, நீரே சர்வேசுரனை மன்றாடும்படி உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா. 3.புனித பாப்பானவருக்கு மிகவும் பிரியமும், ஆறுதலும் அகமகிழ்வும் உரோமாபரி முதலிய இராச்சியங்களில் வி;நோய் முதலானவைகளை நீக்கியவரான புனித செபஸ்தியாரே, இந்நேரங்களில் கிறிஸ்துவர்களுக்குள்ளே பஞ்சம், படை, கொள்ளைநோய் ...