Posts

புனித செபஸ்தியாருக்கு 7 மன்றாட்டு

Image
1.பிதாவின் சித்தத்தினாலே உயர்ந்த குடும்பத்தினரான தாய் தகப்பனிடத்திலே பிறந்து எண்ணிலடங்காத பண்ணிய நன்மைகளைச் செய்து வேதத்துக்காகத் துன்பப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக படையில் சேவை செய்தவரான புனித செபஸ்தியாரே, சத்திய திருச்சபையார் எல்லாரையுஞ் சகல பொல்லாப்பக்களிலே நின்று, சர்வேசுரன் இரட்சித்தருள வேணுமென்று பரமகர்த்தர் சந்நிதியில் நீர் மன்றாட வேண்டுமென்று உம்மைப் பார்த்து பிரார்த்தித்துக் கொள்கிறோம் -பர, அருள், பிதா. 2.ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் அநேக அஞ்ஞான இராஜாக்களுக்கும் பிரபக்களுக்கும் சத்திய வேதத்தை பிரசங்கித்து பத்திமதி சொன்னவரான புனித செபஸ்தியாரே, உலகெங்கிலும் பசாசின் ஆராதனை ஒழித்து எல்லோருஞ் சத்திய வேதம் அறிந்து, ஞான தீட்சை பெற்று, திருச்சபைக்கு உள்ளாகத் தக்கதாக, நீரே சர்வேசுரனை மன்றாடும்படி உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா. 3.புனித பாப்பானவருக்கு மிகவும் பிரியமும், ஆறுதலும் அகமகிழ்வும் உரோமாபரி முதலிய இராச்சியங்களில் வி;நோய் முதலானவைகளை நீக்கியவரான புனித செபஸ்தியாரே, இந்நேரங்களில் கிறிஸ்துவர்களுக்குள்ளே பஞ்சம், படை, கொள்ளைநோய் ...

புனித செபஸ்தியாரை நோக்கி ஜெபம்

Image
அஞ்ஞானிகளால் உபாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் ஆறுதல் செய்யவும் வேதசாட்சி முடிபெறவும் போர்ச்சேவகரான புனித செபஸ்தியாரே, என்பேரில் இரக்கமாயிரும். ஆகாதவனுடைய மரணத்தை விரும்பாமல், அவன் குணப்பட விரும்பம் சர்வேசுரன்ளூ பாவிகள் மனந்திரும்பவும், நீதிமான்கள் பரிசுத்தப்படவும், வைசூரி, பேதி பெருவாரியான காய்ச்சல் முதலிய வியாதிகளை அனுப்பினாலும், சிலவிசை முன் பாடுபட்டுப் பேறடைந்த புனிதர்களுடைய வேண்டுதலாலே உபத்திரப் படுகிறவர்களுடைய துன்பநாளில் அவர்களுக்கு ஆறுதலை கட்டளையிடுகிறாரென்று நான் அறிந்திருக்கிறபடியால் இந்த வியாதியில் உமது சகாயத்தைக் கேட்டு மன்றாடுகிறேன். உரோமாபரியில் உம்முடைய பேரால் பீடம் எழுப்பியபின் வி;க்காய்ச்சல் நீங்கினதென்று நான் அறிந்திருக்கிறேன். தியோக்கிளேசியான் அரசனுக்குப் பயப்படாமல் பெரிய வேதசாட்சியான புனித செபஸ்தியாரே! இந்த உபத்திரவமான வியாதியில் என்னைக் கைவிடாதேயும். ஏன் பாவங்களுக்காக வந்த நோயை நான் பொறுமையோடே பொறுக்க வேண்டியதுதான், சுவாமியின் கைப்பாரம் என்மேல் சுமத்தப்பட்டது நானோ வெகுபலவீனன், காற்றால் அடிக்கப்பட்ட சருகுபோலிருக்கிறேன். கடலில் கிடக்கும் துரும்பபோல் தத...
Image
புனித செபஸ்தியாருக்கு புகழ்மாலை சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும் பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை. . . . . இஸ்பீரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை. . . .  வேதசாட்சிகளுக்கு இராக்கினியான புனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். உயர்ந்த குடும்பத்தில் பிரதாப மகிமையான புனித செபஸ்தியாரே, உமது பிறப்பினால் நற்போன் பட்டணத்தை முக்கியப்படுத்தின புனித செபஸ்தியாரே. . . இத்தாலி தேசத்தில் அதிசயப்பண்ணிய பிரகாசத்தினால் விளங்கியவரே. . . . வேதத்துக்காகத் துன்பப்பட்ட விசுவாசிகளுக்கு ஆதரவாயிருக்கப் படையில் சேவித்தவரே. . . .  அஞ்ஞான இருளில் ஞானக்கதிரால் பிரகாசித்தவரே. . .  தரித்திரர்களுக்கு உதார தகப்பனாரே. . . நிர்ப்பந்தங்களுக்குள் தத்தளித்த வேதசாட்சிகளுக்குப் பத்திமதி சொல்லித் திடப்படுத்திப் பிரகதியில் சேர்பித்தவரே. . . ஆச...